திருமணம் தாமதமாகி கொண்டே போகிறதா? - Seithipunal
Seithipunal


ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திருமணம் என்பது உரிய காலத்தில் நடைபெற வேண்டும். ஆனால், தற்போது உள்ள காலக்கட்டத்தில் பெரும்பாலான திருமணங்கள் காலதாமதமாகவே நடைபெறுகின்றன.

ஜாதகங்கள் வலுவான நிலையில் இருக்கும் பட்சத்திலும், சில பொருளாதார சூழ்நிலை காரணமாக சிலர் தங்களது திருமணங்களை தாமதப்படுத்தி வருகின்றனர்.

சிலருக்கு நல்ல வருமானம், உத்தியோகம், சொத்துகள் மற்றும் நல்ல பண்புகள் இருந்தாலும் திருமணம் காலதாமதமாகிறது.

மேலும், ஜாதக ரீதியாகவும் சிலருக்கு திருமணம் காலம் கடந்து நடைபெறுவதற்கான வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்கின்றது. இதற்கு அவர்களின் ஜாதகங்களை ஆராயும்போது குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம், புத்திர ஸ்தானம் மற்றும் படுக்கை ஸ்தானம் பாதிக்கப்பட்டு இருப்பதும் ஒரு காரணம் ஆகும். காலம் கடந்து திருமணம் நடைபெறுவதற்கான கிரக அமைப்புகள் யாதென்று இனி பார்ப்போம்.

குடும்ப ஸ்தானத்தில் சனி வீற்றிருப்பதும்

குடும்ப ஸ்தானத்தில் ராகு, கேதுக்கள் அமர்வது

குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் அமர்வது

செவ்வாய், சனி இணைந்து குடும்ப ஸ்தானத்தை பார்ப்பது

களத்திர ஸ்தானத்தில் சனி வீற்றிருப்பதும்

களத்திர ஸ்தானத்தில் ராகு அல்லது கேதுக்கள் அமர்வது

களத்திர ஸ்தான அதிபதி மறைவு ஸ்தானங்களில் நிற்பது

களத்திர ஸ்தானத்தில் சூரியன் தனித்து நிற்பதும்

களத்திர ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் இணைந்து இருப்பது

சனி மற்றும் செவ்வாய் இணைந்து களத்திர ஸ்தானத்தை பார்ப்பது 

ராகு, கேது பிடிக்குள் எல்லா கிரகங்களும் அகப்படுவதும் 

ஆண்களின் ஜாதகத்தில் சுக்கிரன் நீசம், அஸ்தமனம், வக்கிரம் மற்றும் மறைவு ஸ்தானங்களில் நிற்பதும்

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் நீசம், அஸ்தமனம், வக்கிரம் மற்றும் மறைவு ஸ்தானங்களில் நிற்பதும்

பாதகாதிபதிகள் குடும்ப, களத்திர ஸ்தானத்தோடு தொடர்பு கொள்ளும் பட்சத்தில் திருமணத்தை தாமதப்படுத்துகிறது.

திருமண வயதில் பகை கிரகங்களின் திசை நடைபெற்றாலும் திருமணத்தை தாமதப்படுத்துகிறது.

திருமணத்தில் தாமதம் ஏற்பட்டாலும் குடும்பஸ்தானம், புத்திர ஸ்தானத்தை குரு பார்த்தால் தடை ஏதும் இல்லாமல் திருமணம் நடக்கும். பொதுவாக களத்திர ஸ்தானம் வலுத்து இருக்கும் பட்சத்தில் திருமணம் கண்டிப்பாக நடைபெறும் என்பதில் ஐயமில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

marriage horoscope


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->