இந்த இடத்தில் மச்சம் இருந்தால்.. பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.!!
macham palan 23
சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, ஆடம்பர வாழ்க்கை வரும்போது 'அவன் மச்சக்காரன்" என்பார்கள். பிறக்கும்போதே சிலருக்கு மச்சம் இருக்கும். ஒரு சிலருக்கு நடுவே தோன்றுவதும் உண்டு. உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை தெரிந்து கொள்ளலாம். இன்று உள்ளங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள்? என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக உள்ளங்கையில் மச்சம் இருந்தால் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் திறமைகள் அதிகம் கொண்டவர்கள். நிறைய நண்பர்களை கொண்டவர்கள். செல்வாக்கு உடையவர்கள். பல துறைகளை பற்றிய அறிவு கொண்டவர்கள். எண்ணிய இலக்கை அடைந்து வெற்றி பெறக்கூடியவர்கள். சிறிது பொறாமை குணம் உடையவர்கள்.
இடது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் எளிதாய் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கும் காரியங்களில் எதிர்பாராத வகையில் தோல்வி ஏற்படும். எச்சரிக்கையாய் இருந்தால் எல்லாவற்றையும் சமாளித்து, பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
ஆண்களுக்கு உள்ளங்கையில் மச்சம் இருந்தால்...
ஆண்களின் வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் செல்வாக்கு கொண்டவர்கள். நண்பர்கள் அதிகம் உடையவர்கள். ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்கள். செய்யும் தொழிலில் முன்னேற்றம் அடையக்கூடியவர்கள். இறைநம்பிக்கை உடையவர்கள்.
ஆண்களுக்கு இடது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் எதிர்ப்புகளை அதிகம் கொண்டவர்கள். நிதானமற்ற செயல்பாடுகளால் சில இழப்புகள் நேரிடும். எதிலும் கவனத்துடன் செயல்பட்டால் நன்மை உண்டாகும்.
பெண்களுக்கு உள்ளங்கையில் மச்சம் இருந்தால்...
பெண்களுக்கு வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நற்குணங்களை உடையவர்கள். விருப்பம் போல் வாழக்கூடியவர்கள். பேச்சில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
பெண்களுக்கு வலது உள்ளங்கையின் பின்புறத்தில் மச்சம் இருந்தால் அமைதியான குணம் உடையவர்கள். சண்டைகளை விரும்பாதவர்கள். அனைவரிடத்திலும் அனுசரித்துச் செல்லக்கூடியவர்கள்.
பெண்களுக்கு இடது உள்ளங்கையில் மச்சம் இருப்பது நன்மையை அளிக்கும்.
பெண்களுக்கு இடது உள்ளங்கையின் பின்புறத்தில் மச்சம் இருந்தால் முன்கோப குணம் உடையவர்கள். குறைந்த நண்பர்களை உடையவர்கள். நேர்மையான குணநலன்கள் மூலம் எதிர்ப்புகளை சந்திக்கக்கூடியவர்கள்.