இந்த இடத்தில் மச்சம் இருந்தால்.. அன்பும், அமைதியும் நிறைந்த வாழ்க்கை துணை அமைவார்..!! மச்ச பலன்கள்..!! - Seithipunal
Seithipunal


தோள்பட்டையில் மச்சம் இருந்தால்....

வலது தோள்பட்டையில் மச்சம் இருந்தால் பணத்தை சிக்கனமாகவும், திட்டமிட்டும் செலவழிப்பார்கள். எதையும் புத்திசாலித்தனமாக செய்வார்கள். மேலும், தைரியமிக்கவராகவும், திறமை உள்ளவராகவும் இருப்பார்கள்.

இடது தோள்பட்டையில் மச்சம் இருந்தால் எதிலும் பதற்றமான செயல்பாடுகளை கொண்டவர்கள். கற்பனை வளம் உடையவர்கள். புதியதை விரும்பி செய்யக்கூடியவர்கள்.

பின்பக்க தோள்பட்டையில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு அன்பும், அமைதியும் நிறைந்த வாழ்க்கை துணை அமைவார்.

முதுகில் மச்சம் இருந்தால்...

முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். இவர்கள் கல்வியில் சிறந்தவர்களாக இருப்பார்கள். அனைவராலும் விரும்பக்கூடியவர்கள். மேலும், வசதியாக வாழக்கூடியவர்கள்.

மார்பில் மச்சம் இருந்தால்...

மார்பில் மச்சம் இருந்தால் அவர்கள் தங்கள் லட்சிய பாதையை நோக்கி பயணிப்பவர்களாக இருப்பார்கள்.

வலது மார்பில் மச்சம் இருந்தால் போராட்ட குணம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். பொதுநலம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கக்கூடியவர்கள். இசை சார்ந்த துறைகளில் ஈடுபாடு உடையவர்கள்.

இடது மார்பில் மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியான முன்னேற்றங்களை அடைபவர்களாக இருப்பார்கள்.

மார்புக்கு கீழ் மச்சம் இருந்தால் அவர்கள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். அவர்களிடம் நகைச்சுவை உணர்வும் அதிகம் இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

macham palan 18


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->