செல்வத்தைப் பெருக்கும் அஷ்ட லட்சுமி குபேர விளக்கு.! எப்படி பயன்படுத்தலாம்.?!
kubera vilakku for all loan issue and money issue
தனலட்சுமி, ஆதி லட்சுமி, கஜ லட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி என்று இருக்கும் செல்வங்களை தான் அஷ்டலட்சுமி என்று கூறுகிறோம்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த அஷ்ட லட்சுமியை துதித்து வந்தால் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. செல்வத்தின் அதிபதியாக இருப்பவர் குபேரர். குபேரனை வணங்கி அவரது அருள் கிடைத்தால் வாழ்க்கையில் வளம் கிடைக்கும்.
அஷ்ட லட்சுமியுடன் கூடிய குபேரனை தொடர்ந்து வீட்டில் ஏற்றி வழிபட்டு வந்தால் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து கடன் பிரச்சனை நீங்கி சுகவாழ்வு கிடைக்கும்.
அஷ்ட லட்சுமி குபேர விளக்கு எப்பொழுது ஏற்றலாம்:
இதனை அனைத்து நாட்களிலும் ஏற்றி வழிபடலாம். குறிப்பாக குபேரருக்கு உகந்த நாளாக வியாழக்கிழமை பார்க்கப்படுகிறது. அஷ்டலட்சுமி உகந்த நாளாக வெள்ளிக்கிழமை இருக்கிறது. எனவே வியாழன் வெள்ளி களில் இந்த அஷ்ட லட்சுமி குபேர விளக்கு ஏற்றி கும்பிடுவது இன்னும் சிறப்பு.
மேலும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து குலதெய்வத்தை நினைத்து அஷ்ட லட்சுமி குபேர விளக்கு ஏற்றி வழிபடுவது அதிக பலனை கொடுக்கும்.
English Summary
kubera vilakku for all loan issue and money issue