108 அடி உயரம் கொண்ட கோடிலிங்கேஸ்வரர்.! மொத்தம் ஒரு கோடி லிங்கங்கள்., தங்கவயலில் ஹெலிகாப்டர் மூலம் மலர் அபிஷேகம்.! - Seithipunal
Seithipunal


பொதுவாக சிவபெருமான் கோவில்களில் மூலவர் சிவலிங்கத்தைக் தவிர ஆலயத்தை சுற்றிலும் 5 அல்லது 6 சிவலிங்கங்கள் இருக்கக்கூடும். ஆனால், கர்நாடக மாநிலத்தின், கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ள 'கோடி லிங்கேஸ்வரர்' கோவிலில் ஒரு கோடிக்கும் அதிகமான சிவ லிங்கங்கள் உள்ளன.

இந்த ஆலயத்தின் பெயரை கோடி லிங்கேஸ்வரர் தான். கோலார் மாவட்டத்தின்  கம்மசந்திரா என்ற இடத்தில் இந்த கோடிலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் என்னும் வகையில், 108 அடி உயரத்தில் இந்த பிரம்மாண்ட சிவலிங்கம் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கோவில் முழுவதும் பல்வேறு அளவுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோடி லிங்கேஸ்வரர் ஆலயம் சாம்பவர் சிவமூர்த்தி என்பவரால், முதல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து செய்யப்பட்டு வழிபாடு தொடங்கப்பட்டது. அதன் பின்னர் ஆலயத்துக்கு வந்து வழிபடும் அனைவரும் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட தொடங்கிவிட்டனர். இப்படியாக கோடிக்கும் அதிகமான சிவலிங்கங்கள் இங்கு இருப்பதாக தெரிகிறது.

இப்போதும் பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று, இங்கு ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து இறைவனை வழிபட்டு செல்கின்றனர். இந்த ஆலயத்தில் 108 அடி உயரத்தில் மிகப்பெரிய சிவலிங்கம் உள்ளது. அதற்கு நேர் எதிரில் 35 அடி உயரம் கொண்ட நந்தி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கோவிலில் மகாசிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது. 108 அடி உயர சிவலிங்கத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக மலர் கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. மேலும், அந்த நாள் முழுவதும் இறைவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. 

கோலார் மாவட்டம் தங்கவயலில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் தான் இந்த கோடி லிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரம்மதேவர், மகா விஷ்ணு, மகேஸ்வர், அன்னபூரணி, பாண்டுரங்க சுவாமி, கருமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் தனித்தனியாக சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kodi lingeshwarar temple


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->