உங்களுக்கு மகம் நட்சத்திரமா?..! உங்களின் குணம் இப்படித்தான் இருக்கும்..!! - Seithipunal
Seithipunal


இன்று நாம் மகம் நட்சத்திரத்தின் பண்புகள் மற்றும் குண நலன்கள் குறித்து பார்ப்போம். இந்த நட்சத்திரத்தின் ராசி சிம்மம். மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது. மகம் நட்சத்திரத்தின் ராசி அதிபதி சூரியன் ஆகும். 

இவர்களின் குணம்:

மகம் நட்சத்திரக்காரர்கள் எதிலும் தனித்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சுறுசுறுப்பான செயல்பாடுகளை கொண்டவர்கள். அனுபவ அறிவு அதிகமிருக்கும். குடும்பத்தின் மேல் அதிக பாசம் கொண்டவர்கள். நல்ல நிர்வாகத்திறமை உடையவர்கள். இரக்கக்குணம் கொண்டவர்கள் கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கும்.

இந்த செய்திக்குறித்த வீடியோ பதிவு: 

கொள்கை பிடிப்பு குணம் கொண்டவர்கள். பயணங்களில் அதிக விருப்பம் கொண்டவர்கள். எல்லோரையும் கௌரவமாக நடத்தக்கூடியவர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேச மாட்டார்கள். பொருள் சேர்ப்பதில் விருப்பம் கொண்டவர்கள். வசீகரிக்கும் தன்மை கொண்டவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.

உண்மை குணம் கொண்டவர்கள். எதிலும் சிந்தித்து செயல்படும் தன்மை கொண்டவர்கள். நினைத்த காரியத்தை செய்வதற்கு எந்த எல்லை வரை செல்லக்கூடியவர்கள். தான் செய்தது தவறு என்ற விதத்தில் மன்னிப்பு கேட்கும் குணம் கொண்டவர்கள். தனது செயல்பாடுகளில் மற்றவர்கள் தலையிடுவதை விரும்பமாட்டார்கள். சுதந்திர தன்மையுடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

know about magam natchathiram characteristics


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->