கேட்டை நட்சத்திரத்தில் என்ன காரியங்கள் செய்ய வேண்டும்.?!
kettai natchathiram special
கேட்டை நட்சத்திரம்:

நமது முன்னோர்கள் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களை வகுத்து வைத்துள்ளனர். அவை யாதெனில் எல்லா நட்சத்திரங்களிலும், எல்லா காரியங்களையும் செய்வது என்பது உசிதமானதல்ல. சில காரியங்களுக்கு இந்த நட்சத்திரங்கள் மட்டுமே உகந்தது என்று நம் முன்னோர்கள் பகுத்து அதை நமக்கு அளித்தும் சென்றுள்ளனர்.
எந்த ஒரு காரியமும் செய்வதற்கு முன்பாக அன்றைய தினத்தில் உள்ள நட்சத்திரங்களை பார்த்து, நாம் செய்யும் காரியத்திற்கு இந்த நட்சத்திரம் ஏதாவது ஒரு வகையில் ஆதரவாக இருக்கின்றதா? என்று ஆராய்ந்து செய்வது, செய்ய நினைத்த காரியங்களில் எதிர்பார்த்த பலன்களை நாம் அடைய உதவும்.
அந்த வகையில் இன்று நாம் கேட்டை நட்சத்திரத்தன்று என்னென்ன காரியங்கள் செய்யலாம்? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
* வழக்குகளை பேசி தீர்க்க உகந்த நாள்.
* குளம், கிணறு வெட்டுவதற்கு சிறந்த நாள்.
* இயந்திரங்கள் செய்வதற்கு ஏற்ற நாள்.
* சுரங்கம் தோண்டுவதற்கு நல்ல நாள்.
* வாகனங்கள் வாங்க சிறப்பான நாள்.
* சூளைக்கு நெருப்பிடுவதற்கு உகந்த நாள்.
* கால்நடைகள் வாங்குவதற்கும், விற்பதற்கும் சிறந்த நாள்.
* பழைய ஆபரணங்களை மாற்றுவதற்கு ஏற்ற நாள்.
* கடன் வாங்க நல்ல நாள்.
English Summary
kettai natchathiram special