ஆண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லதா?! என்ன சொல்கிறது ஜோதிடம்.!
Is it good for men to have a left eye blink?
1. ஆண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லதா?
ஆண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லதன்று.
2. அஷ்டமி அன்று புதிய வீட்டிற்கு பால் காய்ச்சலாமா?
அஷ்டமி அன்று புதிய வீட்டிற்கு பால் காய்ச்சுவதை விடுத்து மற்ற சுப தினங்களில் மேற்கொள்ளவும்.
3. இறந்தவர் படத்தை எந்த திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்?
இறந்தவர் படத்தை தெற்கு திசையை பார்த்தவாறு வைக்க வேண்டும்.
4. மீனாட்சி அம்மன் தேரில் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் வாகன பயணங்களில் சற்று கவனத்துடன் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. தேய்பிறையில் குழந்தை பிறக்கலாமா?
தேய்பிறையில் குழந்தை பிறக்கலாம்.
6. விறகுகளை கனவில் கண்டால் என்ன பலன்?
விறகுகளை கனவில் கண்டால் கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடுவதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
7. ராகு திசையில் குரு புத்தி நடந்தால் என்ன பலன்?
எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.
ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்.
குடும்பத்தில் புதியவர்களின் வருகை ஏற்படும்.
இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
8. அரசியல் தலைவர்களை கனவில் கண்டால் என்ன பலன்?
அரசியல் தலைவர்களை கனவில் கண்டால் உயர் அதிகாரிகளிடத்தில் நிதானம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
English Summary
Is it good for men to have a left eye blink?