இறந்தவர்கள் நம்மை கூப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?!
irandhavarkal kooppitaal dream
ஆன்மிகம் குறித்த கேள்விகள் மற்றும் பதில்கள்:
1. சுக்கிர திசை நடந்தால் என்ன பலன்?
பொருட்சேர்க்கை உண்டாகும்.
குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும்.
எதிரிகளை வெல்லக்கூடியவர்கள்.
இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
2. வீட்டில் காலையில் விளக்கேற்றலாமா? மாலையில் விளக்கேற்றலாமா?
வீட்டில் இருவேளைகளிலும் விளக்கு ஏற்றுவது சுபிட்சத்தை தரும். முடியாத பட்சத்தில் மாலை வேளையில் விளக்கு ஏற்றலாம்.
3. காகத்தை கனவில் கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் தேவையற்ற விரயச் செலவுகளால் இன்னல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
4. எலுமிச்சை பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் உறவுகள் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.
5. 10ல் சனி இருந்தால் என்ன பலன்?
கடினமாக உழைக்கக்கூடியவர்கள்.
சிக்கனமாக வாழக்கூடியவர்கள்.
தன்மானம் மிக்கவர்கள்.
இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
6. 12ல் குரு இருந்தால் என்ன பலன்?
எதற்காகவும், யாருக்காகவும் கவலைக் கொள்ளமாட்டார்கள்.
அதிகப்படியான சொத்துச்சேர்க்கை உடையவர்கள்.
செலவு செய்வதில் கணக்கு பார்க்கக்கூடியவர்கள்.
இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
7. யானை விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
8. இறந்தவர்கள் என்னை கூப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
English Summary
irandhavarkal kooppitaal dream