வரலெட்சுமி பூஜை எப்படி செய்ய வேண்டும்?
how to do varalakshmi pooja at home
பெண்கள் இருக்கும் முக்கிய விரதங்களில் ஒன்று வரலெட்சுமி விரதம். ஆடி மாதம் வரக்கூடிய இந்த நன்னாளில் பெண்கள் தங்களது வீட்டில் அம்மனை அலங்காரம் செய்து அதற்குத் தேவையான அனைத்தையும் வைத்து படையலிடுவார்கள். இந்த நிலையில் நாளைய தினம் வரலெட்சுமி விரதம் என்பதால் எப்படி பூஜை செய்ய வேண்டும் என்று இந்தப் பதிவில் காண்போம்.
பூஜை செய்யும் முறை:-
விடியற்காலையிலேயே எழுந்து, வீட்டு வாசலில் மாக்கோலம் இட்டு, விளக்கேற்றி, மகாலட்சுமியை வாசலில் இருந்து அழைத்துச் சென்று பல விதமான மந்திரங்கள் சொல்லி வழிபடுவது வழக்கம்.
முதலில் பூஜைக்கான கலசத்தை மகாலட்சுமி போன்று அலங்காரம் செய்யவேண்டும். அதாவது, மனைப்பலகையில் கும்பம் வைத்து, அதில் உள்ள தேங்காயில் அம்மன் முகம், கிரீடம், ஆடை அணிகலன்கள் அணிவித்து, மஞ்சள், குங்குமம் வைத்து, பூச்சூட்டி அம்மனைப் போல் அலங்கரிக்க வேண்டும்.

பின்னர், அதனை வீட்டின் வாசலில் வைத்து மகாலட்சுமியை அந்த கலசத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியில் நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பூஜைக்கான இடத்தில் அமரச் செய்யவேண்டும்.
இதையடுத்து அன்னைக்கு பூஜைகள் செய்ய வேண்டும். தொடர்ந்து பஞ்சமுக நெய் விளக்கு ஏற்றி வெற்றிலை, பாக்கு, பழம், சர்க்கரை பொங்கல், சுண்டல் என நைவேத்யம் படைக்க வேண்டும். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களைப் பாடலாம். தொடர்ந்து நோன்புக் கயிறை சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி, லட்சுமி அஷ்டோத்ரசதம், கனகராதா ஸ்தோத்திரம் சொல்லலாம்.
படிக்க தெரியாதவர்கள் வரலட்சுமியை மனதார வேண்டிக்கொண்டால் போதும். `மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீ தர வேண்டும்' என்று மனம் உருக பிரார்த்தனை செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். இப்படி செய்தால் மகாலெட்சுமி தங்களது வீட்டில் வசம் செய்வாள்.
English Summary
how to do varalakshmi pooja at home