குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020 - இந்த ராசிக்காரருக்கு பொன்னான காலம்.! - Seithipunal
Seithipunal


கடக ராசி :

இதுவரை உங்கள் ராசியில் 5ஆம் இடமான பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து வந்த குருபகவான் இதற்குபின் உங்கள் ராசியில் 6ஆம் இடமான ருண ரோக ஸ்தானத்தில் பெயர்ச்சி அடைகிறார். இதுவரை இருந்துவந்த தடைகள் மற்றும் எதிர்ப்புகளை வெற்றி கொள்ளக்கூடிய பொன்னான காலம் ஆகும்.

ருண ரோக ஸ்தானத்தில் இருந்து குருதேவர் ஜீவன போக மற்றும் குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கின்றார். குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா பயணம் சென்று மகிழ்வீர்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான காலம் இது.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

உத்தியோகஸ்தரர்களுக்கு விரும்பிய இடத்தில் வேலைவாய்ப்புகள் அமையும். இதுவரை தற்காலிக பணியில் உள்ளவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். அலுவலக பணி தொடர்பாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வீர்கள். சக ஊழியர்களிடம் ரகசியங்களை பரிமாறும்போது சிந்தித்து செயல்படவும்.

பெண்களுக்கு :

வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். வேலை தேடும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை ஏற்படும். வரன் தேடுவோருக்கு சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

மாணவர்களுக்கு :

தொழில் கல்வி பயில்வோருக்கு எதிர்பார்த்த இடத்தில் வேலைவாய்ப்புகள் அமையும். அடிப்படைக் கல்வி படிப்பவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். சட்டக்கல்வி பயில்வோருக்கு தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு :

கட்சி சார்ந்த மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு அதன்மூலம் லாபமடைவீர்கள். அரசியல் சார்ந்த விஷயங்களுக்காக வெளிநாட்டு பயணம் சென்று வருவீர்கள். தலைமை அதிகாரிகளிடம் நெருக்கமான சூழல் உண்டாகும்.

விவசாயிகளுக்கு :

ரசாயன உரங்களை உபயோகிப்பதன் மூலம் சிறப்பான வளர்ச்சியை காண்பீர்கள். பூமிக்கடியில் விளையக்கூடிய கிழங்கு வகைகளால் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். விளைச்சலுக்கு தேவையான பாசன வசதிகள் உங்களுக்கு கைக்கொடுக்கும்.

வியாபாரிகளுக்கு :

இதுவரை தொழிலில் இருந்துவந்த முடக்கம் நீங்கி அபிவிருத்தி உண்டாகும். பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு சிறப்பான வளர்ச்சியை கொடுக்கும் காலம் இது. தொழில் முன்னேற்றத்திற்காக வங்கி கடன் வாங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி உகந்த காலமாக அமையும்.

கலைஞர்களுக்கு :

வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று திறமைக்கேற்ப வெற்றியை பெறுவீர்கள். பிரபலமான மனிதர்களின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த பழைய வழக்குகள் சில சங்கடங்களை கொடுக்க நேரிடும்.

வழிபாடு :

வியாழக்கிழமைதோறும் இராகவேந்திரர் மற்றும் குருமார்களை தரிசனம் செய்துவர ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

guru peyarchi in kadaga rasi


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal