செவ்வாய், வெள்ளி கிழமைகளில் என்னென்ன செய்ய வேண்டும்? - இதோ முழு விபரம்.!  - Seithipunal
Seithipunal


வாரத்தில் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகள் கடவுளுக்கு ஏற்ற நாளாக கூறப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் கோயில்களிலும் சிறப்பு வாய்ந்த நாட்களாக கருதப்பட்டு கடவுளுக்கு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்து வருகின்றனர். இந்த கிழமைகளில் வீட்டில் உள்ள பெண்கள் ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது. அவை என்னென்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்?

* வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமையில் வீட்டில் விளக்கு ஏற்றும் போது நல்ல நேரம் முடிவதற்குள் தீபத்தை தானாகவோ அல்லது ஊதியோ அணைக்காமல் புஷ்பத்தை வைத்து அணைக்க வேண்டும்.

* இரவு நேரத்தில் வீட்டை சுத்தம் செய்யும்போது குப்பைகளை வெளியில் கொட்ட கூடாது.  இந்த நாட்களில் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் அல்லது தலை ஈரமாகவோ பூஜை செய்வது துர்அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

* பெண்கள் விளக்கு வைக்கும் நேரத்தில் வாசல் படி, அம்மி, ஆட்டுக்கல் உட்காரக் கூடாது.
விளக்கு ஏற்றிய பின்பு பால், தயிர், உப்பு, கடுகு, ஊசி போன்றவற்றை யாருக்கும் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.

* செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நகம், முடியை கண்டிப்பாக வெட்டக்கூடாது.
இந்த நாட்களுக்கு முந்தைய நாட்களிலேயே வீட்டை கழுவி விடவோ அல்லது துடைக்கவோ செய்ய வேண்டும். செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் செய்வதால் வீட்டில் உள்ள லட்சுமி வீட்டை விட்டு சென்று விடுவாள் என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

* வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வந்தால் மகாலட்சுமி, முருகன், சுக்கிரன் மூன்று கடவுளின் அருளையும் ஒரே நேரத்தில் பெறலாம். செவ்வாய், வெள்ளி கிழமைகள் மகாலட்சுமி, குபேரனுக்கு உரிய நாள் என்பதால் பெண்கள் நெற்றி நிறைய குங்குமத்தை அணிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அணிவது செல்வத்தையும், ஆயுளையும் பெருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

girls What do on Tuesday and Friday


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->