வீட்டில் நேர்மறை எண்ணங்கள் உண்டாக இவற்றை செய்தால் போதும்..!
For good vibes
வீட்டில் எப்பொழுதும் நேர்மறை எண்ணங்கள் இருந்தால்தான் மகிழ்ச்சியான வாழ்வை வாழ முடியும். ஆனால் சில வேளைகளில் எதிர்மறை எண்ணங்களும் தீய சக்திகளின் ஆதிக்கமும் ஏற்பட வாய்ப்பு உண்டு. சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து நம்மை எப்படி வைத்துக் கொள்வது என்பதை பார்ப்போம்.
தீய சக்திகளில் இருந்து விடுபட காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வரலாம் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு காயத்ரி மந்திரத்தை ஜபித்து வர தீய சக்திகளின் தாக்கம் குறையும்.
செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலுள்ள பூஜையறையில் விளக்கேற்றி கற்பூர ஆரத்தி காட்டி இறைவனை வழிபட்டு வர அது நம் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொண்டு வரும். இதனால் அந்த வீட்டில் தீய சக்திகள் மற்றும் எதிர்பாற்றல் அண்டாது என்பது முன்னோர் வாக்கு.
அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் மும்மூர்த்திகள் உடன் கூடிய அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட தீய சக்திகளின் தாக்கம் குறையும்.
அனுமன் என்றாலே தைரியம் என பொருள். அனுமன் மந்திரத்தை ஜபித்து வீட்டில் பூஜை செய்து வர வீட்டிலுள்ள தீயசக்திகள் மற்றும் பயம் ஆகியவை நீங்கும்.