சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. தேவசம் போர்டு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். நடப்பு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. நவம்பர் 16ஆம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

தற்போதுஒரு நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் படிப்படியாக தளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. 

கேரளாவில் பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக, பம்பா நதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளது. பம்பா நதியில் குளிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் நேரடி நெய்யபிஷேகம் செய்ய தேவசம் போர்டு அனுமதி வழங்கி உள்ளது. எரிமேலியில் இருந்து பாரம்பரிய பாதையான சபரிமலைக்கு செல்லும் 38 கிலோமீட்டர் தொலைவுள்ள பெருவழிப்பாதை திறக்கப்பட உள்ளது. சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை தினமும் 45 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் ஆக அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கேரள அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

devotees are allowed to ghee anointing


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->