அட்சய திருதியையில் தங்கம் வாங்க முடியலயா.? இதை வாங்கினாலே அதிர்ஷ்டம் தான்.!
Buy these items apart from gold on Akshaya Trithi and reap the blessings
அட்சய திருதியை என்பது இந்துக்கள் மற்றும் சமணர்களால் கொண்டாடப்படும் ஒரு புனித நாளாகும். இந்த நாள் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் வளர்பிறையில் கொண்டாடப்படுகிறது. பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாளாகவும் இது கொண்டாடப்பட்டு வருகிறது.
அட்சய திருதியை என்பதற்கு எப்போதும் குறையாதது என்ற சொல்லுக்கு எப்போதும் குறையாதது என்ற சமஸ்கிருத சொல்லுக்கு எப்போதும் குறையாதது என்று அர்த்தம். அதனால் அட்சய திருதியை அன்று வாங்கும் எல்லா பொருட்களுமே பல்கி பெருகும் என்பது நம்பிக்கை.

இதன் காரணமாக மக்கள் அட்சய திருதியை தினத்தன்று தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்களை வாங்கி வீட்டில் வைப்பார்கள். அவை பல்கிப் பெருகும் என . தங்கம் மற்றும் வெள்ளி அல்லது வேறு என்ன பொருட்களையும் அட்சய திருதியை அன்று வாங்கலாம் என்று பார்ப்போம்.
பொதுவாகவே அட்சய திருதியை அன்று நாம் செய்யும் நன்மைகள் பன்மடங்காக பெருகும் என்பது ஐதீகம். இதனால் லட்சுமி தேவி குடியிருக்கும் எல்லா பொருட்களையும் ஆட்சய திருதியை என்று வாங்கலாம்.

தங்கம் அல்லது வெள்ளி தான் அந்தப் புனித நாள் அன்று வாங்க வேண்டும் என்பது இல்லை. அதனால் தங்கம் வாங்க முடியாதவர்கள் உப்பு அல்லது மஞ்சள் வாங்கி வைத்துக் கொள்ளலாம். அதிலும் குறிப்பாக கஸ்தூரி மஞ்சள் மிகவும் நன்மை அளிக்க கூடிய ஒன்றாகும்.
அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் மற்றும் வெள்ளி தான் வாங்க வேண்டும் என்பது இல்லை பச்சரிசி, உப்பு, வெல்லம் போன்ற பொருட்கள் வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் உலகம் தோன்றிய நாளான அட்சய திருதியை அன்று உலகில் முதல் முதலாக வந்த பொருட்கள் இவைதான் என்று சொல்ல படுகிறது.
English Summary
Buy these items apart from gold on Akshaya Trithi and reap the blessings