நீங்கள் இந்த நட்சத்திரமா? இதுதான் உங்கள் பட்சி.! பஞ்சபட்சி சாஸ்திரம்..!
batchi sasthiram for stars
'பஞ்ச" என்றால் 'ஐந்து" என்று பொருள். 'பட்சி" என்றால் 'பறவை" என்று பொருள். 'சாஸ்திரம்" என்றால் 'எழுதப்பட்டவைகளை செயல்படுத்தி பார்த்தால் உண்மை விளங்கும்" என்று பொருள்.
பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது மனிதனின் குணநலன்களை ஐந்து பறவைகளின் குணநலன்களோடு ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் உடையது.
27 நட்சத்திரங்களும் ஐந்து பறவைகளுக்குள் அடக்கப்படுகின்றது. இம்முறையில் ஒருவர் பிறக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் அவருக்கான பறவை தீர்மானிக்கப்படுகிறது.
பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது குருவழியாக சீடர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கூறப்பட்டது ஆகும்.
பஞ்சபட்சி சாஸ்திர குறியீடு ஐந்து பறவைகளை வைத்து உருவாக்கப்பட்டது.
அவையாவன,
வல்லூறு
ஆந்தை
காகம்
கோழி
மயில்
பஞ்சபட்சி பார்க்கும் விதம் :
நீங்கள் தேய்பிறையில் அதாவது, பௌர்ணமியின் அடுத்த நாளிலிருந்து அமாவாசைக்கு முதல் நாள் பிறந்தவரா? அப்படியென்றால் உங்களது பட்சி எது? என்று பார்க்கும் முறை இதோ.
வல்லூறு பட்சி :
திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வல்லூறு பட்சிக்கு சொந்தக்காரர்கள்.
ஆந்தை பட்சி :
அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆந்தை பட்சியைக் கொண்டவர்கள்.
காகம் பட்சி :
உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காகம் பட்சிக்காரர்கள்.
கோழிப்பட்சி :
திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோழிப்பட்சியைக் கொண்டவர்கள்.
மயில் பட்சி :
அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மயில் பட்சியின் ஆட்சி உள்ளவர்கள்.
English Summary
batchi sasthiram for stars