இன்றைய ராசிபலன்கள்... இந்த ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் சாதகமாகும். இது உங்கள் ராசியா? - Seithipunal
Seithipunal


மேஷம்:

உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உபரி வருமானம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். 

ரிஷபம்:

அரசு தொடர்பான காரியங்களில் சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய சிந்தனைகள் தோன்றும். பொதுச்சேவையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். தெளிந்த சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் பணவரவுகள் அதிகரிக்கும். 

மிதுனம்:

எதிர்பாராத சில வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இனம்புரியாத சில கனவுகளின் மூலம் குழப்பமான சூழல் ஏற்படும். நிர்வாகத்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த சில எதிர்ப்புகளை பற்றி அறிந்து கொள்வீர்கள்.

கடகம்:

எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த ஒத்துழைப்பு காலதாமதமாக கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.

சிம்மம்:

உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த துன்பங்கள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். தொழில் தொடர்பான முன்னேற்றமான சிந்தனைகள் அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். 

கன்னி:

பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில பொருள் வரவுகளின் மூலம் மேன்மை அடைவீர்கள். மனதில் இனம்புரியாத ஒருவிதமான பதற்றமான சூழ்நிலைகள் ஏற்பட்டு மறையும். புனித தலங்களுக்கு சென்று வருவதற்கான எண்ணங்கள் மேம்படும். 

துலாம்:

கால்நடை வளர்ப்பு சார்ந்த தொழிலில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் உதவிகளால் நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். மனதில் அஞ்ஞானம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். மனைவி வழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். மனதில் கற்பனைத்திறன் மேம்படும்.

விருச்சகம்:

கேளிக்கை மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கால்நடைகளின் மூலம் பொருள் வரவு கிடைக்கும். போட்டியில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் உதவிகள் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் அதிகரிக்கும்.

தனுசு:

வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். மற்றவர்களின் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். எதையும் திட்டமிட்டு செயல்படுவது நன்மையளிக்கும். மனதில் இனம்புரியாத பயம், கவலைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தொழில் தொடர்பான எதிர்பார்த்த வங்கி கடன் உதவிகள் கிடைக்கும். 

மகரம்:

பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். நண்பர்களின் உதவிகளால் பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். 

கும்பம்:

பிள்ளைகளின் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவான உதவிகள் கிடைக்கும். நுட்பமான சில விஷயங்களின் மீது ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும். நீர் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். 

மீனம்:

புதிய முயற்சிகளின் மூலம் பாராட்டப்படுவீர்கள். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பத்திரிக்கை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சலும், அதற்கான அங்கீகாரமும் கிடைக்கும். சங்கீதம் சார்ந்த தொழில் நிபுணர்களுக்கு எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள் சாதகமாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

apr 08 rasi palan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal