இன்றைய தினப்பலன்கள்... இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும்... இது உங்கள் ராசியா? - Seithipunal
Seithipunal


மேஷம்:

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நம்பிக்கை அதிகரிக்கும் நாள்.

ரிஷபம்:

விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். மனதில் நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவது முன்னேற்றத்தை ஏற்படுத்தும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்:

சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். முன்னேற்றமான நாள்.

கடகம்:

அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவழிப்பீர்கள். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். ஆதாயம் மேம்படும் நாள்.

சிம்மம்:

சிலருக்கு ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறிகள் குறையும். ஆலய தரிசனம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதியால் லாபம் அதிகரிக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.

கன்னி:

புதிய வேலை நிமிர்த்தமான சிந்தனைகளில் சிந்தித்து செயல்படவும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உறவினர்களின் வழியில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற விஷயங்கள் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.

துலாம்:

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்:

குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். திடீர் தனவரவுகள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கவலைகள் மறையும் நாள்.

தனுசு:

பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான மதிப்பு மேம்படும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். புதிய சிந்தனைகள் உதயமாகும் நாள்.

மகரம்:

வியாபாரம் தொடர்பான பணிகளில் மாற்றம் ஏற்படும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். சுகங்கள் மேம்படும் நாள்.

கும்பம்:

தனவரவுகள் சார்ந்த நெருக்கடிகள் குறையும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனை சார்ந்த பணிகளின் மூலம் ஆதாயம் மேம்படும். திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். சகாயம் கிடைக்கும் நாள்.

மீனம்:

புதிய முயற்சிகளில் மாற்றமான முடிவுகள் கிடைக்கும். எதிர் காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் வேலை ஆட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். தனவரவு உண்டாகும் நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

18 nov rasipalan


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->