வாட்ஸ்அப்பின் அசத்தல் அப்டேட்.. என்ன தெரியுமா.? - Seithipunal
Seithipunal


அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, வாட்ஸ்அப் செயலிகளின் மூலமாக அன்றாட உரையாடல்கள் மற்றும் முக்கியமான தகவல்களை  பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இந்த செயலிகளுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர்.

அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் தங்களின் பயனார்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த வகையில், தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 

அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியில் என்று உள்ள லாக் அம்சத்தை தவிர்த்து குறிப்பிட்ட சாட்களை மட்டும் லாக் செய்ய முடியும். இப்படி லாக் செய்யப்படும் சாட்கள் இன்பாக்சிலிருந்து வெளியேற்றப்பட்டு தனியாக சேமிக்கப்படும்.

 இதற்குஸஉங்களின் தனிப்பட்ட பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் ஆகியவற்றின் வாயிலாக தான் இதை நாம் அணுக முடியும். இதன் மூலம் மிகவும் தனிப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய நம் சாட்கள் பாதுகாப்பாக வைக்கமுடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WhatsApp new update in chat lock


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->