வாட்ஸ்அப் குரூப் காலில் இனி 32 பேர் பேசலாம்.. அசத்தல் அப்டேட் .! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பொதுமக்கள் தங்களின் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு பல்வேறு வகையான செயலிகள் பயன்பாட்டில் உள்ளது.

இதில் குறிப்பாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை சிறியவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி அனைத்து தகவல்களையும் பரிமாறிக் கொள்ள முடியும். 

அதனால் இது பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதனைதொடர்ந்து தனிநபர் மட்டுமல்லாமல், குழுவாக இணைந்தும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகளும் உள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புது புது வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், இனி 32 பேர் வரை குரூப் கால் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி  மார்க் ஜூக்கர்பர்க் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WhatsApp group call upto 32 people


கருத்துக் கணிப்பு

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள்.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள்.,
Seithipunal