பிரம்மபுத்ரா நதியில் சீனா கட்டும் மிகப்பெரிய அணை: பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும்: அருணாச்சல் முதல்வர் எச்சரிக்கை..!
Arunachal Pradesh Chief Minister warns against Chinas construction of huge dam on Brahmaputra river
சீனாவின் திபெத் பகுதியில் உருவாகும் பிரம்மபுத்ரா நதியை 'யார்லுங் சாங்போ' என்று சீனா அழைக்கிறது. இந்தியாவில் நுழையும் போது இந்த நதி 'பிரம்மபுத்ரா' என்று இந்த நதி பெயர் பெறுகிறது. தற்போது இந்த நதியின் குறுக்கே சீனா உலகின் மிகப்பெரிய அணையை கட்டி வருகிறது. இதற்கு அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரம்மபுத்ரா நதியில் சீனா மிகப்பெரிய அணை கட்டி வருகிறது. இதனை அந்நாடு தண்ணீர் வெடிகுண்டாக கூட பயன்படுத்தலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பி.டி.ஐ., செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பிரம்மபுத்ரா நதியில் சீனா உலகின் மிகப்பெரிய அணையை கட்டி வருகிறது. இது கவலைக்குரிய விஷயம் என்றும், சீனா நம்பகமான நாடு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
-lzf39.png)
அத்துடன், அந்நாடு என்ன செய்யும் என யாருக்கும் தெரியாது என்றும், சீனாவின் ராணுவ அச்சுறுத்தலை தாண்டி, வேறு எதையும் விட இது மிகப்பெரிய பிரச்னையாக எனக்கு தோன்றுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இது நமது பழங்குடியினருக்கும், நமது வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தப் போகிறது என்றும், இது தீவிரமான பிரச்சினை என்றும், இதனை ஒரு வகையான தண்ணீர் வெடிகுண்டாக கூட சீனா பயன்படுத்தலாம் என்று எச்சரித்துள்ளார்.
-hfpu2.png)
மேலும் இது குறித்து அவர் பேசுகையில், சர்வதேச நீர் பகிர்வு ஒப்பந்தங்களில் சீனா கையெழுத்து போட்டு இருந்தால், அருணாச்சலப் பிரதேசம், அசாம் மற்றும் வங்கதேசத்தில் கோடை காலத்தில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்கும் என்பதால், இந்த திட்டம் முக்கியமானதாக இருந்து இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஆனால், சீனா கையெழுத்து போடவில்லை. இதுதான் பிரச்சினை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனா அணை கட்டிய பிறகு, திடீரென தண்ணீரை திறந்து விட்டால், நமது சியாங் பகுதி பேரழிவை சந்திக்கும் என்றும், ஆதிவாசியினர், தங்களது நிலத்தையும், சொத்துக்களையும் இழக்க நேரிடும் என்றும் அத்துடன், மனிதர்கள் பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
English Summary
Arunachal Pradesh Chief Minister warns against Chinas construction of huge dam on Brahmaputra river