மாணவர்களை நிர்வாணமாக்கி சோதனை செய்த ஆசிரியர்கள்...! கொந்தளித்த பெற்றோர் போராட்டம்! - Seithipunal
Seithipunal


மும்பையையில் சாகாப்பூரில் ஆர்.எஸ்.தமானி என்ற பெயரில் தனியார் பள்ளி இருந்து வருகிறது.அங்கு மாணவ, மாணவியர் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இப்பள்ளியிலுள்ள கழிவறையில் ரத்தக்கறை படிந்து இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதுபற்றி பள்ளி ஆசிரியைகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கு காரணமானவர் யார்? என்பதை கண்டறிய 5 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் அனைவரும் பள்ளியிலுள்ள கூட்ட அரங்கத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.அங்கு யாரும் உண்மையை ஒப்புக்கொள்ளாததால், 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவிகள் பலரை கழிவறைக்கு அழைத்து சென்று நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் வீடு திரும்பியதும் பெற்றோரிடம் தெரிவித்தனர்.இதனால் கோபமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று பள்ளிக்கு சென்று இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீதும் பள்ளி நிர்வாகம் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தினர்.

அதுமட்டுமின்றி காவல்நிலையத்தில் புகாரளித்ததன் பேரில் பள்ளி முதல்வர், ஆசிரியைகள், பெண் உதவியாளர் மற்றும் அறங்காவலர்கள் உள்பட 8 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவியின் பெற்றோர்:

இச்சம்பவம் தொடர்பாக 7-ம் வகுப்பு மாணவியின் பெற்றோர் தெரிவிக்கையில், "என் மகள் நடுங்கியபடி வீட்டிற்கு வந்தாள். மற்ற மாணவர்கள் முன்னிலையில் கழிவறையில் தனது ஆடைகளை கழற்றுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாக அவள் என்னிடம் தெரிவித்தாள். இது ஒழுக்கம் அல்ல, மனரீதியான துன்புறுத்தல்" என்று தெரிவித்தார்.அங்கு  மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்திய கொடூர சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Teachers who stripped students naked and tested them Upset parents protest


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->