கொம்பாக்கத்தில் புதிய மின்மாற்றி.. மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்த எதிர்க்கட்சித் தலைவர்!
New transformer in Kombaakkam Opposition party leader turned it on for public use
புதுச்சேரி கொம்பாக்கத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவாஇயக்கி வைத்தார்.
கொம்பாக்கம் ஜோதி நகர் மக்களின் மின் பற்றாக்குறையை போக்கும் வகையில் மின்துறை மூலம் புதியதாக நிறுவப்பட்ட மின்மாற்றியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி, கொம்பாக்கம் வார்டுக்கு உட்பட்ட ஜோதி நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் மின் பற்றாக்குறையை போக்கும் வகையில் மின் துறை மூலம் ரூ. 19 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் புதிய கூடுதல் மின்மாற்றி அமைக்கப்பட்டு, அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கும் நிகழ்ச்சி கொம்பாக்கம் ஜோதி நகரில் நேற்று மாலை நடந்தது.
தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா. சிவா அவர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து, நினைவு பரிசுகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மின்துறை உதவி பொறியாளர் ரமேஷ், இளநிலை பொறியாளர் அருணகிரிநாதர், உத்திராடம் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தேசிகன், கந்தசாமி, ஜனா, தேவநாதன், அருண், மகேஷ், ஆதிமூலம், முருகேசன், கலியமூர்த்தி, ராம்குமார், பிரகாஷ், சந்துரு, அந்தோணி, சக்திவேல், சந்தோஷ், கருணாகரன், கார்த்திக், சிவாஜி, தனுசு, வேலு, வேலாயுதம், திமுக நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், தொமுச தலைவர் அங்காளன், தொகுதி துணை செயலாளர் அரிகிருஷ்ணன், கிளைக் கழக நிர்வாகிகள் பிஆர்டிசி பாஸ்கர், முருகேசன், கார்த்திகேயன், அரியூர் முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.
English Summary
New transformer in Kombaakkam Opposition party leader turned it on for public use