ஜூலை 15 முதல் யூடியூபர்களுக்கு ஆப்பு: இனிமேல் இப்படி எல்லாம் பணம் சம்பாதிக்க முடியாது; யூடியூப் சேனல்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்..! - Seithipunal
Seithipunal


இன்றைய காலக்கட்டத்தில் யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் பயன்படுத்துவார்கள் இல்லையே என்றே சொல்லலாம். பலரும் சமூக வலைத்தலங்கை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதில் ஏராளமானோர் அதிகமாக பணத்தினை சம்பாதித்து வருகின்றன.

இந்த யூடியூப் சேனல் பலருக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இலகுவாக பணம் சம்பாதித்து முடியும் என்பதால் யூடியூப் பக்கத்தில் சேனல்களை தொடங்கி வீடியோ பதிவேற்றம் செய்து சம்பாதிக்கின்றனர். இவ்வாறு விடீயோக்களை பதிவிடும் சானல்களில் குறிப்பிட்ட பார்வையாளர்களை பெறும் சேனல்களுக்கு யுடியூப் நிறுவனம் பணம் வழங்கி வருகிறது. இதனால் பலரும் கண்ட கண்ட வீடியோக்கள் என்று எதையாவது ஒன்றை அப்லோட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், யூடியூபில் இருந்து பணம் சம்பாதிப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது வரும் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதால் 'காப்பி பேஸ்ட்' யூடியூபர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது, யுடியூப் தனது கொள்கையில் புதிய மாற்றங்களை கொண்டுவல்லதுள்ளது. தங்களின் விதிகளை பூர்த்தி செய்யாத சேனல்கள், பணம் வழங்கும் யூடியூப் பார்ட்டனர் திட்டத்தில் ( Youtube Partner Program (YPP)) இருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யூடியூப் சேனல் மூலம் பணம் சம்பாதிக்க 1,000 சந்தாதாரர்கள், கடந்த 12 மாதங்களில் 4,000 பொதுப் பார்வை நேரம் அல்லது கடந்த 90 நாட்களில் 10 மில்லியன் குறு வீடியோ பார்வையாளர்கள் கொண்டவர்களே யூடியூப்-இல் வருமானத்திற்காக முறையிட முடியும் என்ற விதிமுறைகள் இருந்தது.

புதிய விதிகள் பின்வருமாறு: 

01. தாங்களாக முயற்சி செய்து புதிய படைப்புகளை உருவாக்கும் அசல் படைப்பாளிகளுக்கு மட்டுமே வருமானம் வழங்கப்படும். அவர்களின் வீடியோ மட்டுமே விளம்பரப்படுத்தப்படும்.

02.மீண்டும், மீண்டும் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள்.

03.ஒன்றைப் போலவே மற்றொன்றை உருவாக்கும் வீடியோக்கள்.

04. தரம் குறைந்த வீடியோக்களுக்கும் பணம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மிகக் குறைந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள், மற்றவர்களின் வீடியோவை காப்பி அடித்து உருவாக்கப்பட்ட வீடியோக்கள், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோக்கள், டெம்ப்லேட் மாடல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் போன்றவற்றுக்கு இனிமேல் யூடியூப் நிறுவனம் பணம் தராது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் யூடியூபர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New restrictions for YouTube channels from July 15


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->