அனைத்து ரயில்வே கேட்களிலும் உடனடியாக சிசிடிவி கேமராக்கள்: புதிய நடைமுறைகளை வெளியிட்டுள்ள ரயில்வே துறை..! - Seithipunal
Seithipunal


கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 03 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து, ரயில்வே லெவல் கிராஸிங்கில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை ரயில்வேதுறை வெளியிட்டுள்ளது. இது குறித்து, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ரயில்வே லெவல் கிராஸிங்கில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவித்துள்ளதாவது: அனைத்து ரயில்வே கேட்களிலும் உடனடியாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும், லெவல் கிராஸிங்கில் இண்டர்லாக்கிங் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இண்டர்லாக்கிங், கட்டுமான பணிகளுக்கு பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்தலாம் எனவும், இண்டர்லாக்கிங் இல்லாத கேட்களில் குரல் பதிவு சாதனம் இயங்குகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரயில் வாகனப் பிரிவு 10,000-க்கு மேல் உள்ள ரயில்வே கேட்டுகளில் தானியங்கி இன்டர் லாக் அமைக்கப்பட்டுள்ளது என்றும், கூடுமானவரை அனைத்து இடங்களிலும் இன்டர்லாக் பொருத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அனைத்து ரயில்வே கேட் அருகிலும் வேகத்தடைகள், எச்சரிக்கை பலகைகள் இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அனைத்து ரயில்வே கேட்களையும் 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Railways has issued new procedures requiring the immediate installation of CCTV cameras at all railway gates


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->