சினிமா பாணியில் போதைப்பொருள் கடத்தல்: 'ஹை ஹீல்ஸ்' செருப்புக்குள் கோகைன்: ஹோட்டல் உரிமையாளர் உள்பட 06 பேர் கைது..!
Hotel owner arrested for smuggling drugs in high heels in Hyderabad
தெலுங்கானாவின் ஹைதராபாத்தில், உள்ள முக்கிய கேளிக்கை விடுதிகளில் போதைப்பொருள் வினியோகிக்கப்படுவதாக 'ஈகிள்' சிறப்பு படைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.
இதன் போது, பெண்கள் அணியும் 'ஹை ஹீல்ஸ்' செருப்புகள் வழியே கோகைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி, முக்கிய நபர்களுக்கு விற்பனை செய்த ஓட்டல் உரிமையாளர் உட்பட ஆறு பேரை, தெலுங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருட்களை வாங்கி, பிரபல தொழிலதிபர்கள், கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் ஆகியோருக்கு கொம்பள்ளி பகுதியைச் சேர்ந்த, எம்.பி.ஏ., பட்டதாரியான சூர்யா அன்னமானேனி என்பவர் விற்பனை செய்து வருவதாக சந்தேகத்தில் போலீசார் அவரை பின் தொடந்துள்ளனர்.
-pct9n.png)
குறித்த சந்தேக நபர் 'மல்நாடு கிச்சன்' என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி, அங்கு அவர் போதைப்பொருள் விற்பனை செய்தது வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது காரில் அதிகாரிகள் சோதனை நடத்தியதில், அங்கு கோகைன், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்த காரில் இருந்த பெண் ஒருவரின் 'ஹீல்ஸ்' செருப்பை சோதனையிட்டதில், அதற்குள் கோகைன் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சூர்யா உட்பட ஆறு பேர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
English Summary
Hotel owner arrested for smuggling drugs in high heels in Hyderabad