மீண்டும் சிக்கிய ஸ்டாலின்.. நேற்றைய பேச்சில் இதனை கவனித்தீர்களா?.. வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருந்து வருபவர் மு.க.ஸ்டாலின். மு.க ஸ்டாலினின் தந்தை மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர், இவர் தி.மு.கவின் தலைவராக பதவியேற்றார். 

இவர் பல மேடைகளில் பேசுகையில், தமிழ் மொழியை உச்சரிக்க தெரியாது போல, திடீரென வார்த்தைகளை மாறி கூறிவிடுவார். இவ்வாறாக ஒரு மேடையில், இரண்டு மேடையில் என்றால் பரவாயில்லை. பல மேடைகளில் இது போன்ற வார்த்தை பிதற்றலில் ஈடுபட்டு உளறுவது வழக்கமாகியுள்ளது. இது தொடர்பான விடியோக்கள் இணையதள நெட்டிசன்களிடம் சிக்கும் போது, இதனை வைத்தே அன்றைய நாளினை கடத்தி விடுவார்கள். 

தற்போது கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலும் இணையத்தளம் வாயிலாக விடியோக்கள் மட்டும் வெளியிடப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் அனிதா முதல் மோதிலால் வரை மாணவ - மாணவிகள் பலரும் உயிரிழந்துள்ளனர் என்று கூற முயன்றார். 

ஆனால், அரியலூர் அனிதா முதல் நாமக்கல் மோதிலால் வரை மாணவி - மாணவிகள் உயிரிழந்துள்ளனர் என்று பிதற்றி கூறிவிட்டார். இந்த பதிவுகளை கண்டுகொண்ட நெட்டிசன்கள், தங்களது பாணியில் கலாய்த்து வைரலாக்கி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MK Stalin blather in Assembly Meet 15 September 2020


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->