எலிமினேட்டர் ஆட்டம்; சூப்பர் ஹீரோவான சூரியவன்ஷி; ஹைதராபாத்தை 47 ரன்களில் வீழ்த்தி குவாலிஃபையர் 2 க்குள் நுழைந்த ராஜஸ்தான் அணி..! - Seithipunal
Seithipunal


19 வது ஐபிஎல் சீசனின் எலிமினேட்டர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றிப்பெற்று  இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்திற்கு  முன்னேறியுள்ளது.

இன்று நியூ சண்டிகரில் உள்ள முலான்பூர் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று இந்த போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்தளம் இட்டனர்.

ஜெய்ஸ்வால் நிதானமாக ஆட, வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி, 29 பந்துகளில் 97 ரன்களை குவித்தார். இதில் 05 ஃபோர்கள் மற்றும் 12 சிக்ஸர்கள் அடங்கும். இந்த ஆட்டத்தில் மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற கிறிஸ் கெயிலின் (2013 சீசன் - 59 சிக்ஸர்கள்) சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.

இந்த 2026 நடப்பு சீசனில் 65 சிக்ஸர்களை வைபவ் சூர்யவன்ஷி விளாசியுள்ளார். இந்த சீசனில் அவர் 15 இன்னிங்ஸில் 680 ரன்களை அவர் எடுத்துள்ளார். இதன் மூலம் ஒரே சீசனில் அதிக ரன்கள் விளாசிய Uncapped (சர்வதேச கிரிக்கெட்டில் சீனியர் பிரிவில் விளையாடாத வீரர்) வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அடுத்ததாக ஜெய்ஸ்வால் 29 ரன்களிலும், துருவ் ஜுரெல், 21 பந்துகளில் 50 ரன்கள்,  ரியான் பராக் 26, தசன் ஷனகா 5, ஃபெரைரா 12, ஆர்ச்சர் 04, பர்கர் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். 

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணி சார்பில் பிரபுல் இன்கே 03 விக்கெட்டினையும், சிவாங்க் குமார், நிதிஷ்குமார், இஷான் மலிங்க தலா 01 விக்கெட்டினை வீழ்த்தினர்.

244 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 0 விற்கும், ஹெட் 17, இஷான் கிஷன் 33, சமரன் 01, கிளாசான் 18, நிதிஷ்குமார் ரெட்டி 38, சலீல் அரோரா 35, கம்மின்ஸ் 1, சிவாங் குமார் 27, இஷான் மலிங்க 05,என ஆட்டமிழந்தனர். 

ராஜஸ்தான் அணி சார்பில் ஜோப்ரா ஆச்சர் 03 விக்கெட்டினையும், நன்றே பர்கர், சுசாந்த் மிஸ்ரா, ஜடேஜா தலா 02 விக்கெட்டினையும் யஸ் ராஜ் புஞ்சா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

 இதன் மூலம் ராஜஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அதன்படி, வரும் வெள்ளிக்கிழமை இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் உடன் விளையாடும்.  இந்த போட்டியின் ஆட்டநாயகனாக வைபவ் சூரியவன்ஷி தேர்வானார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajasthan Enters Qualifier 2 After Defeating Hyderabad by 47 Runs


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->