பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாடுகளை வெட்ட கட்டுப்பாடு விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுவதைத் தடுக்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி பொதுச் செயலாளரான சூர்யபிரசாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் அமர்வு இன்று விசாரித்தது. அதன் பின்னர் நீதிபதிகள் வழங்கிய உத்தரவின் படி, 1976-ஆம் ஆண்டு பசு வதையை தமிழக அரசு தடை செய்துள்ளது. 2020-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

நாளை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர பிற பகுதிகளில் மாடுகளை வெட்ட தடைவிதித்துள்ளதோடு, பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படவில்லை என்பதை தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி உறுதி செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Madras High Court has imposed restrictions on the slaughter of cattle in view of the Bakrid festival


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->