'குதிரை பேரத்தை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது'; செல்வப்பெருந்தகை திட்டவட்டம்..! - Seithipunal
Seithipunal


'அருணாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிராவில் குதிரை பேரத்தை காங்கிரஸ் கண்டித்தது போன்று, குதிரை பேரத்தை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது' என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம்  பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், முதல்வராக யார் பதவியேற்றாலும் பிரதமரை சந்திப்பது வழக்கமான நடைமுறைதான். ஏற்கெனவே கேரள முதல்வர் சந்தித்திருக்கிறார். அந்த வகையில் தமிழக முதல்வரும் சந்திக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். அதை முதல்வரும் வலியுறுத்துவார் என நம்புகிறோம் என்றும், மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக மக்களின் வாழ்வாதாரத்துக்கு எதிராக கர்நாடக அரசு செயல்பட்டால் நாங்கள் அதை எதிர்ப்போம். தமிழக உரிமையை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அதேப்போன்று, குதிரை பேரத்தை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது என்றும், அருணாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிராவில் குதிரை பேரத்தை காங்கிரஸ் கண்டித்தது. இதுதான் அனைத்து மாநிலத்துக்கும் பொருந்தும் என்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

மேலும், ஐந்து மாநிலத் தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலையை ஏற்றாமல் இருக்கிறார்கள். தேர்தல் முடிந்ததும் ஏற்றுவார்கள் என்றோம். அதைத்தான் மத்திய பாஜக அரசு இப்போது செய்திருக்கிறது என்று செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Selvaperunthagai categorically asserts that the Congress will never allow horse trading


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->