'திமுக தூண்டுதலின் பேரில் தவெக அரசுக்கு எதிராக குழப்பம் ஏற்படுத்த முயற்சி'; அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


திமுக தூண்டுதலின் பேரில் தவெக அரசுக்கு எதிராக குழப்பம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறதாக மதுரை விமான நிலையத்தில் தமிழக மின்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தவெக ஆட்சிக்கு வந்துவிட்டதால் திமுகவினர் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றதாகவும், எங்கள் கூட்டணி கட்சியான விசிகவினருடன் திமுகவினர் தகராறு செய்கின்றனர். திமுக தூண்டுதலின் பேரில் தவெக அரசுக்கு எதிராக குழப்பம் ஏற்படுத்த இந்த முயற்சி நடக்கிறதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது, அவர்களின் உட்கட்சி பிரச்சினை என்றும்,  அவர்களின் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியில் ராஜினாமா செய்துள்ளனர். அதற்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மின்துறையில் கணக்கீட்டாளர்கள் 7,000 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 1,500 ஊழியர்கள் தான் இருக்கின்றனர். 4,500 பணியிடங்கள் காலியாக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 05 ஆண்டுகளில் இத்துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின்தடையை சரி செய்யும் பணி நடக்கிறதாகவும், மின்துறையில் ஊழல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே மின்மாற்றி ஊழல் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

அதுபோன்று, அரசு வழக்கறிஞர், மாவட்ட வழக்கறிஞர் நியமனம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. அரசு சட்டக் கல்லூரி, தனியார் சட்டக் கல்லூரிகளில் உள்ள விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசு சட்டக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று  செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Nirmal Kumar alleges an attempt to create unrest against the government at the instigation of the DMK


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->