ஆட்டோவில் அமர்ந்தே ‘இன்டர்நெட் சென்சேஷன்’: 2-வினாடி கிளிப்பால் லட்சங்களில் சம்பாதித்த இளம்பெண்...!
Internet sensation while sitting auto young woman earned lakhs 2 second clip
இணையத்தை கலக்கும் புதிய வைரல் செய்தியாக, ஒரு இளம்பெண்ணின் வெறும் 2-வினாடி வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பளிச்சென்ற வெள்ளை உடை, அதனை Compliment செய்யும் வெள்ளி நகைகள், அச்சிடப்பட்ட பந்தனா, இவ்வளவின் நடுவில், ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும் போது கேமராவை நோக்கி ஒரு கண சிரித்து பார்க்கும் அந்த பெண்மணி, நெட்டிசன்களின் கவனத்தை மின்னல் வேகத்தில் கவர்ந்துவிட்டார்.

கண்முன்னே மாயமாகி மறையும் அந்த 2-வினாடி காட்சி, சமூக வலைதளங்களில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துவிட்டது.
அதனைத் தொடர்ந்து, வெறும் சில வினாடிகள் கொண்ட இந்த வீடியோவால் அந்த இளம்பெண் ரூ. 5 லட்சம் வருமானம் பெற்றுள்ளார் என்பது இணையத்தில் புதிய பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Internet sensation while sitting auto young woman earned lakhs 2 second clip