இந்தியராக வெட்கப்படுகிறீர்களா? எங்க நாட்டுக்கு வாங்க!! முன்னாள் பாக். வீரரின் நெத்தியடி பதில்!! - Seithipunal
Seithipunal


நடப்பு உலக கோப்பைத் தொடர் இந்தியாவின் நடைபெற்ற வரும் நிலையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டியில் மைதானத்தில் கூடியிருந்த இந்தியர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டது சர்ச்சை ஏற்படுத்தி நிலை அதற்கு பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில் இஸ்லாமிய பெண் ஊடகவியலாளர் ஒருவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "உலகக் கோப்பை போட்டிகளின் போது பல கிரிக்கெட் ரசிகர்களின் இழிவான நடத்தை ஒரு இந்தியராக என்னை வெட்கப்பட வைக்கிறது.

மக்களை ஒன்று சேர்க்கும் நோக்கத்தில் விளையாட்டின் மீதான இந்த அற்ப, பாதுகாப்பற்ற மற்றும் பெரும்பான்மையான அணுகுமுறை கடந்த ஒரு தசாப்தத்தில் மோடி-ஆர்எஸ்எஸ் உருவாக்கிய இந்தியாவின் அடையாளமாகும்" என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பாகிஸ்தான் அணியில் இடம்பெற்று இருந்த முஸ்லிம் மதத்தை சேராத இரண்டாவது சுழற்பந்துவீச்சாளர் தானேஷ் கனேரியா "நீங்கள் இந்தியராக இருக்க வெட்கப்படுகிறீர்கள் என்றால் எனது நாடான பாகிஸ்தானுக்கு வாருங்கள். உங்களைப் போன்றவர்கள் இந்தியாவுக்குத் தேவையில்லை. இந்தியாவில் உள்ள பலர் இந்த பயணத்திற்கு நிதியுதவி செய்வதில் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நான் நம்புகிறேன்" என பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former pak bowler response to Indian journalist criticism


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->