போலியான தகவலுடன் முட்டுக்கொடுத்த உடன்பிறப்பு.. அசிங்கப்பட்ட திமுக..!! - Seithipunal
Seithipunal


விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த மருத்துவர் கோவிந்தசாமி தனது ட்விட்டர் பதிவில், திமுக கட்சியினை சார்ந்த உடன்பிறப்பு பரப்பிய போலி தகவல் தொடர்பாக புகைப்படத்துடன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்த ட்விட்டர் பதிவில், 

இரா.வெங்கட்ராகவன் என்று அடையாளப்படுத்திய ட்விட்டர் கணக்கை நிர்வகிக்கும் திமுக நபர், சரஸ்வதி கல்லூரியில் இலவசமாக பி.எச்.டி இந்திய கலாச்சாரம் படிக்க வாய்ப்பு தருமாறு மருத்துவர்.இராமதாஸ் அய்யாவிடம் கோரியுள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.

ஆனால், அவரது கணக்கை சோதிக்கையில் இதுவரை மருத்துவர் இராமதாஸிடம் எந்த விதமான உதவியும் கோரியதாக பதிவு இல்லை. மேலும், மருத்துவர் இராமதாஸ் தனது ட்விட்டர் கணக்கை தடுத்துவிட்டதாக (Block) கூறி ட்விட் செய்துள்ளார். மேலும், இரா.வெங்கட்ராகவன் கோரியுள்ள பி.எச்.டி இந்திய கலாச்சாரம், சரஸ்வதி கல்லூரியில் இல்லாத ஒரு பாடம் ஆகும். பி.எச்.டி காமர்ஸ் படிப்பும் பகுதி நேரம் மட்டுமே பயிலும் வசதி சரஸ்வதி கல்லூரியில் இருக்கிறது.

இலவச சேர்க்கைக்கு கூறியதால், மருத்துவர் இராமதாசு தனது கணக்கை பிளாக் செய்ததாக கூறியுள்ளார். மேலும், இதற்கு முந்தையை பதிவில் மருத்துவர் இராமதாசை அவதூறாக கூறி பல பதிவுகளை பதிவு செய்துள்ளார். மேலும், இரா.வெங்கட்ராகவனின் பதிவில் தான் பயின்றுள்ளது பி.எச்.டி. இந்திய தமிழ் என்று தெளிவுற விளக்கியுள்ளார். 

மேலும், இல்லாத ஒரு படிப்பிற்கு ட்விட் பதிவு செய்ததாகவும், எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அப்பட்டமான பொய்யை திமுகவினர் பதிவு செய்து பகிர்ந்து வந்த நிலையில், இதன் உண்மை தன்மை குறித்து மருத்துவர் கோவிந்தசாமி விளக்கியுள்ளார். இணைய ஊடக பேரவை ஒரு காலத்தில் ஆதாரத்துடன் பல நல்ல விஷயங்களை செய்ய உதவிய நிலையில், திமுகவின் ஊடக பேரவை பல போலியான தகவலை பரப்பி வருவதாகவும் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK IT Wing Twitter ID Crazy activity PMK Dr R Govindasamy twit truth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->