அகமதாபாத் விமான விபத்தை முன்பே கணித விளம்பரம்? வைரலாகும் புகைப்படம்!  - Seithipunal
Seithipunal


அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் நேற்று பிற்பகலில் புறப்பட்ட சில நொடிகளில் விமான நிலையம் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியைச் சென்றடைந்து பயங்கரமாக தரையிறங்கியது. 

இதில் 242 பயணிகளில் ஒரே ஒருவர் விஷ்வாஸ் குமார் உயிருடன் மீட்கப்பட்டார். மற்ற 241 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, ஒரு முழு குடும்பம், மருத்துவர்கள், வெளிநாட்டில் உள்ள உறவுகளை பார்க்க புறப்பட்டவர்கள், வெளிநாட்டவர், குழந்தைகள் உள்ளிட்டோர் உயிரிழந்தனர். 

இந்நிலையில், இந்த விபத்துடன் தொடர்புடையது போல் அதே நாளின் காலை வெளியான Mid-day ஆங்கில நாளிதழில், கிட்ஜானியா நிறுவனம் தந்தையர் தினம் தொடர்பான விளம்பரமொன்றை வெளியிட்டிருந்தது. 

அதில், ஒரு கட்டிடத்தின் ஓரத்தில் ஏர் இந்தியா விமானம் சிக்கியிருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. நேற்று பிற்பகலில் நடந்த விபத்திலும் விமானம் ஒரேபோல் கட்டிடத்தில் மோதியது. இதனைக் கண்ட சமூக வலைத்தள பயனர்கள், "இது விபத்துக்கான முன்அறிவிப்பு போல இருக்கிறது" எனக் கூறி அந்த விளம்பரத்தையும் உண்மை காட்சியையும் ஒப்பிட ஆரம்பித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ahmedabad plane crash Air India


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->