உனக்கு 40 எனக்கு 18 !மருமகனை திருமணம் செய்ய முயன்ற மாமியார்! -மகள் மீது கொலை முயற்சி!
You are 40 I am 18 Mother in Law tried marry her soninlaw Attempted murder her daughter
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கே.வி.பி.புரம் மண்டலத்தில் ஒரு 18 வயது வாலிபர், அதே கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் சேர்ந்து வாழ்ந்த வீட்டில், சிறுமியின் 40 வயது தாய் கூட வசித்து வந்தார்.இந்த சம்பவத்தின் பின்னணி அதிர்ச்சியளிக்கிறது.

இதில் மாமியாருக்கும் மருமகனுக்கும் மர்மமான காதல் உறவு உருவாகி, சிறுமி இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் இருந்தனர். இதையறிந்த சிறுமி தன் கணவர் மற்றும் தாயாரை கண்டித்தார், ஆனால் அவர்கள் காதலை நிறுத்தவில்லை. பின்னர், மாமியார் தனது மருமகனுடன் திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்தார்.
இதைத் தொடர்ந்து,நேற்று முன்தினம் இரவு, வாலிபர் தன் மாமியாருக்கு தாலி கட்ட முயன்றார். இதை கண்ட அவரது மனைவி தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மாமியாரும் கணவரும் சிறுமியை கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றனர்.அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் சேர்ந்து சிறுமியை மீட்டனர்.
இந்த சம்பவத்தில் மாமியார் மற்றும் மருமகனும் சரமாரியாக தாக்கப்பட்டு காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
You are 40 I am 18 Mother in Law tried marry her soninlaw Attempted murder her daughter