ஆசைகாட்டி பலே வேலை பார்த்த காதலன்.! கம்பி நீட்டிய நேரத்தில் காதலி செய்த காரியம்.!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூரை அடுத்த ராமாபுரம் அருகே தோட்டக்காடு பகுதியை சேர்ந்த லதா(22) (பெயர் மாற்றப்பட்டு இருகின்றது). லதா தஞ்சையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். தோட்டக்காடு பகுதி அருகே வசித்து வரும் கோவிந்தராஜ் என்பவரின் மகனான நீலகண்டன் (28) என்பவர் தஞ்சை அருகே இருக்கும் வயலூர் குடிநீர் சப்ளை சர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். 

இந்த நிலையில் லதாவும், நீலகண்டனும் ஒருவரை ஒருவர் காதலித்து வர இந்த காதலை பயன்படுத்தி நீலகண்டன் லதாவிடம் திருமணம் செய்து கொள்வதாக மிகவும் உறுதியாக தெரிவித்து லதாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதன் காரணமாக லதா கர்பமடைந்துள்ளார். 

இதனை தொடர்ந்து லதா நீலகண்டனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வந்துள்ளார். ஆனால் கண்டு கொள்ளாத நீலகண்டனை மிகவும் வற்புறுத்தியும் இருக்கின்றார். ஆனால் அவர் லதாவை வெகுவாக தவிர்த்துள்ளார். 

pregnant, seithipunal

இந்த நிலையில் நீலகண்டனுக்கு வேறு ஒரு பெண்ணுடான் திருமணம் செய்ய நிச்சயதார்த்த வேலைகள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து கேள்விப்பட்ட லதா மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி என்ன செய்வதென தெரியாமல் தவித்து பின்னர் வல்லத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

நீலகண்டனை அழைத்து விசாரிக்க முயல அவர் தலைமறைவாகி விடுகிறார். இந்நிலையில், மகளிர் காவல் துறையினர் அவர் மீது கற்பழிப்பு வழக்கை பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thanjavure boy cheated her girl friend


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->