கள்ளக்காதல் சந்தேகம் கொலைவெறியாக மாறியது…! மனைவியை அரிவாளால் தாக்கி, காரால் மோதி கொன்ற கணவன்...!
Suspicion adultery turned murderous madness Husband attacks wife machete and kills her car
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் குடும்ப உறவையே உலுக்கிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலுராகி கிராமத்தைச் சேர்ந்த அக்ஷய் என்பவருக்கும், ஷைலா (28) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
ஆரம்பத்தில் அமைதியாக இருந்த இவர்களின் வாழ்க்கை, பின்னர் சந்தேகங்களாலும் குற்றச்சாட்டுகளாலும் சிக்கலான திருப்பத்தை எடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஷைலாவுக்கு மற்றொரு நபருடன் தொடர்பு இருந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து, அதனை கைவிடுமாறு அக்ஷய் எச்சரித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அந்த தொடர்பு தொடர்ந்ததாகத் தெரிவிக்கப்படும் நிலையில், இந்த விவகாரம் குடும்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.இதன் பின்னர் ஆத்திரத்தில் அக்ஷய், தனது மனைவியையும் பெற்றோரையும் காரில் அழைத்து சென்றுள்ளார். கங்காபுரா அருகே காரை நிறுத்திய அவர், ஷைலாவை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து, அரிவாளால் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடுமையாக காயமடைந்த ஷைலா, உயிர் பிழைக்க போராடி வயல்வெளிக்குள் ஓடினார்.ஆனால் அதிலும் தப்பிக்க முடியாமல், அக்ஷய் காரை ஓட்டி அவரை விரட்டிச் சென்று மோதியதுடன், கீழே விழுந்திருந்த நிலையில் மீண்டும் காரை ஏற்றி கொடூரமாக தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் ஷைலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த கொடூர சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்களது செல்போன்களில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால், வீடியோ வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிலர் கற்கள், கட்டைகள் வீசி தடுக்க முயன்ற போதிலும், குற்றவாளி தனது செயல்களை நிறுத்தவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, அக்ஷய் மற்றும் அவரது பெற்றோர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறு எவ்வாறு கொடூரமான முடிவிற்கு தள்ளுகிறது என்பதற்கான இன்னொரு அதிர்ச்சி சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.
English Summary
Suspicion adultery turned murderous madness Husband attacks wife machete and kills her car