மும்பை பள்ளி மாணவியை கடத்திவந்த மதுரை நாடக காதலன்! ஒரு அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம், வெர்சோவா பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் மும்பையில் இட்லி கடை வைத்து பிழைத்த வந்துள்ளார்.

இவரின் கடையில் மதுரை, வாழவந்தான்புரத்தை சேர்ந்த மாணிக்கம் (வயது 30) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த 6-ந்தேதி பாக்கியராஜின் 16 வயது மகளை மாணிக்கம் மதுரைக்கு அழைத்து வந்து உள்ளார்.

மகளை காணவில்லை என்று பாக்கியராஜ் வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, போலீசார் மதுரை விரைந்து மாணிக்கம் மற்றும் பள்ளி மாணவியை மீட்டனர்.

மேலும், மாணிக்கத்தை கைது செய்த போலீசார், மதுரையிலிருந்து விமானம் மூலம் மும்பை கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே வெளியான தகவலின் படி, பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி, காதலிப்பதாக ஏமாற்றி மாணிக்கம் கடத்திவந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai School Girl Kidnaped madurai yong man


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->