மயிலாடுதுறை : மணமக்கள் கொடுத்த இசை விருந்து! இளையராஜா பாட்டை இவ்ளோ அழகா பட முடியுமா?! - Seithipunal
Seithipunal


திருமணம் முடிந்த கையோடு, திருமண நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் மணமகனும், மணமகனும் இளையராஜாவின் பாடலை பாடி அசத்திய அழகான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

பொதுவாக திருமண நிகழ்ச்சிகள் என்றாலே பல சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறுவது வாடிக்கை. மணமக்களுக்கு தங்களது வாழ்வின் முக்கியமான தருணமாக இந்த திருமணம் அமையும்.

இந்த நிலையில், அப்படியான ஒரு திருமண நிகழ்ச்சியில் மணமக்கள் தங்களுக்கும், தங்களை வாழ்த்த வந்த உறவினர்களுக்கும் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியை நிகழ்த்தி உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, ஆனந்தநல்லூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த புழுதிக்குடி பகுதியை சேர்ந்த மீனாட்சி என்பவருக்கும், கடந்த ஏழாம் தேதி மங்கை நல்லூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.

திருமண நிகழ்வுகள் அனைத்தும் முடிந்த பிறகு, திருமணத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் மணமகனும், மணமகனும் இளையராஜாவின் இனிமையான பாடலை பாடி அசத்தினர்.

இது குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மணமக்களை வாழ்த்த வந்த உறவினர்களுக்கு, மணமக்கள் கொடுத்த இந்த இசை விருந்து பார்க்கும் நமக்கும் நல்ல திருமண விருந்து தான் என்று சொன்னால் மிகையாகாது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mayiladuthurai marriage pride sing ilayaraja song


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->