தமிழகம் | "வீடு புகுந்து காதல் உல்லாசம்" கம்பி நீட்டிய நாடக காதலனை கம்பி என்ன வைத்த போலீசார்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி, கொலை மிரட்டல் விடுத்த நாடக காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் நாடகா காதலனுக்கு துணையாக இருந்த அவனின் தாய் உள்ளிட்ட உறவினர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கானூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளம் பெண்ணும், சங்கராபுரம் பகுதியை சேர்ந்த மணி என்ற இளைஞரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

மணி அடிக்கடி தனது காதலின் வீட்டுக்கே சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, நெருக்கமாக இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இது குறித்து இளம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே, உடனடியாக மணியின் வீட்டிற்கு சென்று திருமணம் குறித்து பேசி உள்ளனர்.

அப்போது மணியின் குடும்பத்தார் இளம்பெண்ணின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், தாக்க முற்பட்டுள்ளனர் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து இளம் பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில், மணி உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், மணியின் தாய் சாந்தா உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallakurichi drama lover arrest 2023


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->