கணவனுடன் கள்ளக்காதல் செய்த பெண்ணை, கத்தியால் குத்திய உயிர்த்தோழி.!
girl try to kill friend for illegal relationship
சென்னை கொடுங்கையூர் வேம்புலியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த முனியம்மா என்பவரும், நுங்கம்பாக்கத்தை சேர்ந்த பிரியா என்பவரும் மிகவும் நெருங்கிய தோழிகள். பிரியா முனியம்மாவை பார்க்க அடிக்கடி அவருடைய வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். பிரியாவிற்கும் பிரியாவின் தோழி கணவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தோழிக்கு தெரியாமல் பிரியாவும், அவருடைய கணவரும் அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளனர். இதுகுறித்து பிரியாவின் தோழிக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த பிரியாவின் தோழி இவ்வாறு செய்யாதே என எச்சரித்து இருக்கின்றார். ஆனால், பிரியா அதனை கேட்காமல் தோழியின் கணவருடன் நெருங்கிப் பழகி இருக்கின்றார்.
இந்நிலையில், இருவரும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து இருக்கின்றனர். அங்கே இருவரும் உரையாடிக் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது நீ என் கணவரிடம் பேசாதே என்று பிரியாவிடம் அவருடைய தோழி கூறி இருக்கின்றார். ஆனால், பிரியவோ நான் பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த பிரியாவின் தோழி முனியம்மா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதக் என்று பிரியாவின் வயிற்றில் வேகமாக குத்தி இருக்கிறார். இதன் காரணமாக ரத்த வெள்ளத்தில் மிதந்த பிரியாவை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர். காவல்துறையினர் பிரியாவின் தோழியை கைது செய்திருக்கின்றனர்.
English Summary
girl try to kill friend for illegal relationship