பாஜக வேட்பாளர் மீது கருப்பு மை ஊற்றிய இளைஞர் தப்பி ஓட்டம்.!!
youth escaped who threw black ink on the BJP candidate
உத்தரப் பிரதேசம் மாநிலம் கோசி தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக தாரா சிங் சவுகான் போட்டியிடுகிறார். உத்திரபிரதேசம் மாநிலம் முன்னாள் முதல்வர் மாயாவதியின் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இவர் தற்பொழுது இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.
முன்னாள் அமைச்சரான இவர் மீது நபர் ஒருவர் கருப்பு மை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாரா சிங் சவுகான் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்ற போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாஜக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றபோது பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் கருப்பு மை வீசிவிட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி பாஜக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் தாராசிங் சவுகான் மீது எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே கருப்பு மை வீசி உள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
youth escaped who threw black ink on the BJP candidate