ஒரே அசிங்கமா போச்சு குமாரு! என்னையவே யாருன்னு கேட்டுட்டாங்க! ஒரு வணக்கம் கூட சொல்லல... மரியாதை இல்லாம...! - நயினார் நாகேந்திரன் கவலை பேச்சு
You asked who I am You didnt even say hello without respect Nainar Nagendrans worried speech
பா.ஜ.க. கட்சி கூட்டம் நடைபெற்றதில் அக்கட்சியின் மாநில தலைவர் 'நயினார் நாகேந்திரன்' கலந்துகொண்டு உடையாடியதாவது,"கட்சி நிர்வாகிக்கு போன் செய்தேன்... நயினார் நாகேந்திரன் பேசுகிறேன் என்றேன். ஆ... சொல்லுங்க... என்கிறார்.வணக்கம் கூட சொல்லுவதில்லை நம் கட்சியில் பாதி பேர்...

நான் எதார்த்தமாக சொல்கிறேன்.போன் எடுத்தா எல்லோரும் என்ன சொல்லணும்னா... வணக்கம் சார் என்று சொன்னா நல்லா இருக்கும்.குறையாக சொல்லவில்லை. வசதியான வீட்டு பிள்ளைகள் அப்படிதான் வளர்ந்து இருப்பார்கள். தப்பா நினைக்காதீங்க.எப்படி இருக்க வேண்டும் என்றால் போன் எடுத்தால் வணக்கம் சார்... எப்படி இருக்கீங்க என்று கேட்டால் நன்றாக இருக்கும்.
வடசேரியில் சாலியர் தெரு, போன் செய்து கிளைக்கழக செயலாளர் தானா என்று கேட்டேன்.கிளைக்கழக செயலாளர் நான் இல்லையே. கண்ணன் என் பேரை சொல்லி இருப்பான் என்று நினைக்கிறேன். நான் போட்டோ கடையில் வேலை பார்க்கிறேன் என்று சொன்னார்.
இல்லைப்பா... நீ தான் கிளைக்கழக செயலாளர். உன் பேரு, போன் எல்லாம் இருக்கிறது. நான் நயினார் நாகேந்திரன். என்னை தெரியுதா உனக்கு. முன்பு அமைச்சராக இருந்தேன். பஸ்செல்லாம் ஓட்டும்போது. அம்மா பீரியட்ல அமைச்சராக இருந்தேன்.அப்படியா.. நீங்க யாருன்னு தெரியலை. கண்ணன் கிட்ட கேட்டு சொல்றேன் என்று சொன்னார்.
இன்னொரு போன் கடலூருக்கு செய்தேன். நான் நயினார் நாகேந்திரன் பேசுகிறேன் என்றேன்.அவங்க காதுக்கு உங்க வீட்டு நயினா பேசுறமாதிரி கேட்டு இருக்கு... ஏய்... இன்னா ஒழுங்கா இருந்துக்கோ... என்றார்கள்.உடனே போனை வேறொருவரிடம் கொடுத்து விட்டேன்.சில இடங்களில் சில விஷயங்கள் இப்படி நடக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
You asked who I am You didnt even say hello without respect Nainar Nagendrans worried speech