பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்கா...? ஜூன் 1 திட்டமிட்டபடி திறக்கப்படுமா...? - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி பதில்...!
Will there be any change opening schools Will they open as planned on June 1 Minister Rajmohan dramatic response
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அப்போது, திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்ததை தொடர்ந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
ஆனால், மாநிலம் முழுவதும் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளதாக கூறினார்.
மேலும், ஜூன் மாத முதல் வாரத்தில் வெப்ப அலை நீடிக்குமா அல்லது தென்மேற்கு பருவமழை தொடங்குமா என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் விரிவான தகவல் கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வானிலை துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியான பிறகு, பள்ளிகள் திறப்பு தேதி தொடர்பாக முதல் அமைச்சர் விஜய்யுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும், அதன் பின்னரே இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பள்ளிகளில் செயல்பட்டு வரும் காலை உணவு மற்றும் மதிய உணவு திட்டங்கள் எந்த மாற்றமுமின்றி வழக்கம்போல தொடரும் என்றும் அவர் உறுதியளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Will there be any change opening schools Will they open as planned on June 1 Minister Rajmohan dramatic response