ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் யாருக்கு..? எப்படி பெறலாம்...? - கனிமொழி கருணாநிதி வெளியிட்ட முக்கிய விளக்கம்! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி, திமுக அரசின் சாதனைகள் மற்றும் புதிய தேர்தல் அறிக்கை குறித்து விளக்கமளித்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் 404 நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், காலை உணவு திட்டம், ‘வீடு தேடி மருத்துவம்’, ‘நான் முதல்வன்’, ‘புதுமைப் பெண்’ உள்ளிட்ட பல மக்கள் நலத் திட்டங்களை மு.க. ஸ்டாலின் அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மீதமுள்ள வாக்குறுதிகளில் சில, ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாமை மற்றும் உள்ளூர் எதிர்ப்புகள் காரணமாக நிறைவேறாததாக தெரிவித்த அவர், புதிய தேர்தல் அறிக்கை சுமார் 80,000 மக்கள் கருத்துகள், வல்லுநர் ஆலோசனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாக விளக்கினார்.

“நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகள் மட்டுமே இடம்பெற வேண்டும்” என முதலமைச்சர் உறுதி செய்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்த அவர், “அவர்களின் அறிக்கையை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை; நடைமுறையில் உள்ள திட்டங்களையே மீண்டும் தெரிவித்துள்ளனர்” என்று விமர்சித்தார்.

இல்லத்தரசிகள் மற்றும் மகளிர் குடும்பத் தலைவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அரசு நிர்ணயிக்கும் வருமான வரம்புக்குள் வரும் ரேஷன் கார்டு கொண்ட குடும்பங்கள் இதன் பயனாளர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. இல்லத்தரசிகளுக்கான ரூ.8,000 கூப்பன் திட்டம்.

இந்த கூப்பன் மூலம் பெண்கள் தங்களுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் மிக்ஸி, கிரைண்டர், ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவற்றை தாங்களே தேர்வு செய்து வாங்கிக்கொள்ளலாம்.

குறிப்பாக, எந்த ஒரு குறிப்பிட்ட பொருளையும் கட்டாயப்படுத்தாமல், அவர்களின் தேவைக்கு ஏற்ப தேர்வு செய்யும் சுதந்திரம் வழங்கப்படுவது இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகும். பெண்களின் தினசரி வேலைச்சுமையை குறைத்து, அவர்களின் நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த உதவும் ஒரு முதலீடாகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who eligible 8000 housewife coupon How can I get it Important explanation released by Kanimozhi Karunanidhi


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->