த.வெ.க மாநாடு எப்போது?.. விஜய் சொல்லப் போகும் அந்த தேதி எது தெரியுமா?
When is the T.V.K conference Do you know the date Vijay is going to tell
தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் மாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும், அதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி, கடந்த மாதம் 28-ந்தேதி, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அக்கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து இதில் இழுபறி நீடித்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாநாடு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநாட்டை நடத்துவது குறித்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், மாநாட்டை 23ம் தேதி நடத்த முடியுமா என்றும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்தும் விஜய் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
மேலும் மாநாட்டை இந்த மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று விஜய் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் தேதியை இன்று விஜய் அறிவிக்க உள்ளார்.
English Summary
When is the T.V.K conference Do you know the date Vijay is going to tell