ஒன்றிய அரசின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...! - முதலமைச்சர் விஜய் - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய், அரசியல் வேறுபாடுகளை தாண்டி மாநில நலனே முதன்மை என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு சமூக வலைதளத்தின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக அரசியலில் அதிரடி எழுச்சியை பதிவு செய்த த.வெ.க.வுக்கு பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அதேபோல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளப் பதிவின் மூலமும் விஜய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அவர்களின் வாழ்த்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மதிப்பிற்குரிய பிரதமரின் அன்பான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி.

தமிழ்நாட்டு மக்களின் நலனும், மாநிலத்தின் முன்னேற்றமும் எங்களின் பிரதான நோக்கமாக இருக்கும். அரசியல் வேறுபாடுகளை தாண்டி மக்கள் நலப் பணிகளில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட உள்ளோம். இந்த பயணத்தில் ஒன்றிய அரசின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவருக்கு எனது நன்றிகள். மக்கள் சேவையில் முன்னேற அனைவரின் கூட்டு பங்களிப்பும் அவசியம். தமிழ்நாட்டின் பண்பாடு, மொழி மற்றும் மரபு மதிப்புகளை பாதுகாப்பதில் எங்கள் அரசு உறுதியுடன் செயல்படும்.

அரசியல் எல்லைகளை தாண்டி தமிழக மக்களின் நலனே எங்கள் முன்னுரிமை” என்று விஜய் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் விஜயின் இந்த சமரசமான மற்றும் இணக்கப்பூர்வமான அரசியல் அணுகுமுறை, மாநில மற்றும் தேசிய அரசியல் அரங்கில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We eagerly await cooperation and support Union Government Chief Minister Vijay


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->