எச்சரிக்கை! புகாருக்கு தீர்வு...144 மாவட்ட செயலாளர்களையும் நீக்குவது தான்! - திருமாவளவன்
Warning solution complaint is to remove all 144 district secretaries Thirumavalavan
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தனது முகநுால் பக்கத்தில், நேரலையில் தெரிவித்ததாவது,"புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், 3 மாவட்டச் செயலாளர்களை தவிர்த்து, ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டத்தை நடத்துவதாக அறிகிறேன்.

இது, கட்சி விதிகளுக்கு முரணானது. மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க, நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். புகார் பரிசீலனையில் இருக்கிறது.
புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், 144 மாவட்டச் செயலாளர்களையும் நீக்க வேண்டியது இருக்கும்.பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடும் கட்சி, உயிர்ப்போடு இருக்கும். தினமும் மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை வரிசைப்படுத்தி, அவற்றை தீர்க்க செயல் திட்டங்களை வரையறுக்க வேண்டும்.
எந்த ஊரை எடுத்துக்கொண்டாலும், மனை பட்டா கோருவது பிரச்சனையாக உள்ளது. விளிம்பு நிலை மக்களுக்கு பட்டா வழங்குவது போன்ற பிரச்சனைகளில், நாம் கவனம் செலுத்த வேண்டும்.சிறிய பிரச்சனைகளை பெரிதுபடுத்தினால், நான் கட்சியையே நடத்த முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Warning solution complaint is to remove all 144 district secretaries Thirumavalavan