திமுக அரசுக்கு 4 பக்கம் இருந்துவரும் எதிர்ப்பு.. என்ன செய்யப்போகிறார் முதல்வர் ஸ்டாலின்.? வெளியாகுமா அறிவிப்பு.? - Seithipunal
Seithipunal


நம்பி வாக்களித்த மக்களை ஆளும் தி.மு.க அரசு ஏமாற்றாமல்  5 சவரன் வரை அடமானம்‌ வைத்த நகை கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யவேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் மற்றும் திமுக அரசு செய்யும் செயலுக்கு எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், நகை கடன் தள்ளுபடி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.  ஆனால் கூட்டுறவு துறை மூலமாக வழங்கப்பட்ட 35 லட்சம் நகைகடன்களில் 14.5 லட்சம் நகைகடன்கள் மட்டுமே ஏற்புடையது என தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. இது ஏழை எளிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு  வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், வெற்றி பெற்ற பிறகு அதனை கிடப்பில் போடுவதும்தான் இன்றைய ஆட்சியாளர்களின் வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் தேர்தல் நேரத்தில் தி.மு.க அளித்த முக்கிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது.

நகை கடன் தள்ளுபடி விவகாரத்திலும் ஆளும் தி.மு.க அரசு  தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது.  நம்பி வாக்களித்த மக்களை ஆளும் தி.மு.க அரசு ஏமாற்றாமல்  5 சவரன் வரை அடமானம்‌ வைத்த நகை கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தே.மு.தி.க சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth says about gold loan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->